/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சுற்றுச்சூழல் தின விருது விண்ணப்பங்கள் வரவேற்பு
/
சுற்றுச்சூழல் தின விருது விண்ணப்பங்கள் வரவேற்பு
ADDED : ஏப் 30, 2025 07:02 AM
புதுச்சேரி : சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, மாசு கட்டுப்பாட்டு குழுமம் சார்பில், விருது மற்றும் சான்றிதழ் வழங்க இருப்பதால், முன்மொழிவுகள் பரிந்துரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
அறிவியல் தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் மற்றும் மாசு கட்டுப்பாட்டு குழும இயக்குனர் செய்திக்குறிப்பு:
சுற்றுச்சூழல் தினம் ஜூன் 5ம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. அதையயொட்டி, புதுச்சேரியில், சுற்றுச்சூழலை பேணுவதி லும், இது தொடர்பான பணிகளிலும், குறிப்பிட்ட அளவு பணியாற்றிய பொதுமக்கள், நிறுவனங்கள், தன்னார்வ அமைப்புகள் ஆகிய ஒன்றிற்கு சுற்றுச்சூழல் விருது, 50 ஆயிரம் ரூபாய் மற்றும் சான்றிதழ் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கடந்த 20௨2 முதல் 20௨4ம் ஆண்டு வரை, சுற்றுச்சூழல் பற்றி சிறப்பாக பணியாற்றிய, பொதுமக்கள், நிறுவனங்கள், தன்னார்வல அமைப்புகள் ஆகியவற்றில் இருந்து தகுதியான ஒன்றினை தேர்வு செய்ய முன்மொழிவுகள் பரிந்துரைகள் வரவேற்கப்படுகிறது.
அதற்கான தகுதிகள் பற்றி குறிப்புரை மற்றும் விண்ணப்ப படிவம் ஆகியவற்றை இத்துறை, அலுவலகம் மற்றும் காரைக்கால் மண்டல அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம். https://dste.py.gov.in/ppcc/pdf/Envt--- Award- 2025.pdf 2 என்ற இணையதளத்தில் இருந்து நகல் எடுத்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வரும் 15ம் தேதி மாலை 5:00 மணிக்குள் அனுப்ப வேண்டும். இவ்வாறு அவர், தெரிவித்துள்ளார்.