/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தனியார் கம்பெனி அனுமதிக்கு ரூ.2.5 லட்சம் லஞ்சம் சுற்றுச்சூழல் துறை அலுவலர், புரோக்கர் கைது புதுச்சேரியில் சி.பி.ஐ., அதிரடி

ADDED : செப் 21, 2024 12:36 AM

புதுச்சேரி: தனியார் கம்பெனிக்கு அனுமதி கொடுக்க ரூ. 2 லட்சம் லஞ்சம் வாங்கிய புதுச்சேரி சுற்றுச்சூழல் அறிவியல் அலுவலர் மற்றும் புரோக்கரை சி.பி.ஐ., அதிகாரிகள் கைது செய்தனர்.
புதுச்சேரி சுற்றுச்சூழல் துறையில் தனியார் தொழிற்சாலைகள் அனுமதி பெறுவதற்கு லஞ்சம் பெறப்படுவதாக சி.பி.ஐ.,க்கு புகார்கள் சென்றது. இதனால் சுற்றுச்சூழல் துறையை சி.பி.ஐ., ரகசியமாக கண்காணித்து வந்தது.
இந்நிலையில், புதுச்சேரி பகுதியில் உள்ள ஒரு தனியார் கம்பெனி பல ஆண்டுகளாக இயங்காமல் இருந்து வருகிறது. இந்த கம்பெனி செயல்பாட்டில் உள்ளதுபோல் காண்பித்து வங்கியில் கடன் மற்றும் அரசு சலுகைகளை பெற, சுற்றுச்சூழல் துறையில் சான்றிதழ் கேட்டு அதன் உரிமையாளர் விண்ணப்பித்துள்ளார்.
சுற்றுச்சூழல் துறையில் புரோக்கராக செயல்பட்ட, தொண்டமாநத்தம், அண்ணாமலை நகரைச் சேர்ந்த ரமேஷ்கண்ணன்,52; இதற்கு ரூ. 2.5 லட்சம் லஞ்சம் தர வேண்டும் என, கூறியுள்ளார். அதன்படி, கம்பெனி உரிமையாளர் கொடுத்த ரூ. 2.5 லட்சம் பணத்தில், ரமேஷ்கண்ணன் ரூ. 50 ஆயிரம் தனது கமிஷன் தொகையாக எடுத்து கொண்டார்.
மீதி தொகை ரூ. 2 லட்சத்தை ரெட்டியார்பாளையம், 6வது குறுக்கு தெருவில் வசிக்கும், சுற்றுச்சூழல் துறை அறிவியல் அலுவலர் சீனிவாசராவ், 59; என்பவரிடம் கொடுத்தார்.
நேற்று சென்னையில் இருந்து புதுச்சேரி வந்த சி.பி.ஐ., அதிகாரிகள், நெல்லித்தோப்பு, அண்ணா நகரில் உள்ள சுற்றுச்சூழல் துறை அலுவலகத்தில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அறிவியல் அலுவலர் சீனிவாசராவ், புரோக்கர் ரமேஷ்கண்ணன் இருவரையும் பிடித்து விசாரணை நடத்தினர்.
பின்பு, ரெட்டியார்பாளையத்தில் உள்ள சீனிவாசராவ் வீட்டில் இருந்து 2 லட்சம் பணம் மற்றும் புரோக்கர் ரமேஷ் கண்ணனிடம் இருந்து 50 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். சுற்றுச்சூழல் துறையில் உள்ள சில ஆவணங்களையும், ஹார்டு டிஸ்க்குகளை பறிமுதல் செய்தனர். இருவரையும் கைது செய்து, புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர்.