/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நிகழ்ச்சி
/
சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நிகழ்ச்சி
ADDED : மார் 14, 2024 06:14 AM

திருக்கனுார் : வாதானுார் அன்னை சாரதா தேவி அரசு உயர்நிலைப் பள்ளியில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
ஆசிரியை ரேணு வரவேற்றார். தலைமை ஆசிரியர் வீரையன் தலைமை தாங்கினார்.
ஆசிரியர் பாலகுமார் நோக்கவுரையாற்றினார். ஆசிரியை ஜென்னி தொகுத்து வழங்கினார்.
மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் எழில் ராஜன் கலந்து கொண்டு பல்வேறு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு மற்றும் மரக்கன்றுகள் வழங்கினார்.
பெற்றோர் ஆசிரியர் சங்க கவுரவ தலைவர் மீனாட்சி சுந்தரம், தலைவர் லட்சுமணன், முன்னாள் ராணுவ வீரர் ஆளவந்தான் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.
விழாவில், ஆசிரியர் சரவணன் நன்றி கூறினார். இதில், ஆசிரியர்கள் பார்வதி, செந்தமிழ்ச்செல்வி, மலர்கொடி, குப்புசாமி, குமுதா, வேலவன், மகேஸ்வரி, கார்த்தி, அன்புக்கரசி, ஓம் சாந்தி, சுஜாதா, தையல்நாயகி மற்றும் மாணவர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

