தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/துப்புரவு தொழிலாளர்களுக்கு போனஸ் முன்னாள் தி.மு.க., எம்.எல்.ஏ., வலியுறுத்தல்

துப்புரவு தொழிலாளர்களுக்கு போனஸ் முன்னாள் தி.மு.க., எம்.எல்.ஏ., வலியுறுத்தல்

துப்புரவு தொழிலாளர்களுக்கு போனஸ் முன்னாள் தி.மு.க., எம்.எல்.ஏ., வலியுறுத்தல்


UPDATED : நவ 10, 2026 10:32 AM

ADDED : நவ 10, 2026 10:28 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 10, 2026 10:32 AM ADDED : நவ 10, 2026 10:28 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரியில் துப்புரவு தொழிலாளர்களுக்கு போனஸ் வழங்க வேண்டும் என முன்னாள் தி.மு.க., எம்.எல்.ஏ, அனிபால் கென்னடி வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவரது அறிக்கை:

துப்புரவு தொழிலாளர்கள்தான் புதுச்சேரியை துாய்மையின் அடையாளமாக உலகுக்கு காட்டுகின்றனர்.

சுற்றுலா பயணிகள் இதனால்தான் புதுச்சேரிக்கு வருவதை விரும்புகின்றனர். நேரான சாலைகள் மட்டுமின்றி, சுத்தமான இடங்களும் அவர்களை கவர்கின்றன. ஆனால் இந்தாண்டு தீபாவளிக்கு தொழிலாளிகளுக்கு போனஸ் எதுவும் தரவில்லை. ஒப்பந்த தொழிலாளர்கள் என்றாலும் அதை பெறுவதற்கு அவர்களுக்கு தகுதியும், உரிமையும் இருக்கிறது.

புதுச்சேரி அரசு பல துறைகளுக்கு போனஸ் தந்ததே தவிர துப்புரவு தொழிலாளர்களை கண்டுகொள்ளவே இல்லை.

அதனால் அவர்கள் ஒரு நாள் தூய்மைப் பணியில் ஈடுபடாமல் புறக்கணித்துள்ளனர். ஒரு நாள் வேலை நிறுத்தத்துக்கே புதுச்சேரி துர்நாற்றம் வீசும் அளுவிற்கு குப்பைகள் கிடக்கிறது.

எனவே புதுச்சேரி அரசு உடனடியாக இந்த விஷயத்தில் தலையிட்டு, துப்புரவு தொழிலாளர்களுக்கு போனஸ் வழங்க முதல்வர் ரங்கசாமியும், துறை அமைச்சரும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us