டெங்கு பாதிப்பை கட்டுப்படுத்த மாஜி எம்.எல்.ஏ., கோரிக்கை
டெங்கு பாதிப்பை கட்டுப்படுத்த மாஜி எம்.எல்.ஏ., கோரிக்கை
UPDATED : நவ 22, 2026 06:27 PM
ADDED : நவ 22, 2026 06:27 PM
புதுச்சேரி: புதுச்சேரியில் டெங்கு பாதிப்பை தடுக்க அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என, முன்னாள் எம்.எல்.ஏ. அசோக் பாபு கோரிக்கை வைத்துள்ளார்.
அவரது அறிக்கை:
முதலியார்பேட்டை பகுதியில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வருவதாக அப்பகுதி மக்கள் முறையிட்டனர்.
பாதிக்கப்பட்ட மக்களின் கோரிக்கையை ஏற்று மருத்துவத் துறையினரும், அரசு அதிகாரிகளும் விரைந்து செயல்பட்டு, தேவையான மருத்துவ உதவிகளை உடனடியாக வழங்க வேண்டும்.
மேலும், ரத்தம் தேவைப்படும் நோயாளிகளுக்கு உதவுவதற்காக தனது அலுவலகத்தில் ரத்ததானம் செய்ய முன்வரும் தன்னார்வத் தொண்டர்கள் தயாராகக் காத்திருக்கின்றனர். எப்போது ரத்தம் தேவைப்பட்டாலும் எங்களை அணுகலாம். பொதுமக்களுக்கு உதவ நாங்கள் எப்போதும் தயாராக இருக்கிறோம்.
பரவி வரும் டெங்குவை கட்டுப்படுத்த அரசு அலட்சியம் செய்யாமல் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தெரிவித்துள்ளார்.
