ADDED : ஆக 25, 2026 03:42 AM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: மிலாது நபி தினத்தை முன்னிட்டு, புதுச்சேரி மாநிலத்தில் நாளை அனைத்து வித மதுபானம் கடைகள் மூட கலால்துறை உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து கலால்துறை துணை ஆணையர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு:
புதுச்சேரி பிராந்தியம் மாகேவில் இன்று 25ம் தேதியும், நாளை 26ம் தேதி புதுச்சேரி, காரைக்கால், ஏனாம் பகுதியில் மிலாது நபி தினத்தை முன்னிட்டு அனைத்து விதமான மதுபான கடைகள் மூட கலால் துறை உத்தரவிட்டுள்ளது.
மீறுபவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு செய்திகுறிப்பில் கூறப்பட்டுள்ளது.
