sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மார்ச் 10, 2026 ,மாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

 மதுபான வாகனங்களில் ஜி.பி.எஸ்., கருவி கட்டாயம் கலால் துறை அதிரடி

/

 மதுபான வாகனங்களில் ஜி.பி.எஸ்., கருவி கட்டாயம் கலால் துறை அதிரடி

 மதுபான வாகனங்களில் ஜி.பி.எஸ்., கருவி கட்டாயம் கலால் துறை அதிரடி

 மதுபான வாகனங்களில் ஜி.பி.எஸ்., கருவி கட்டாயம் கலால் துறை அதிரடி


ADDED : மார் 08, 2026 04:30 AM

Google News

ADDED : மார் 08, 2026 04:30 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் வரும் சட்டசபைத் தேர்தலை முன்னிட்டு, தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை மதுபானத் தொழிற்சாலைகள் முறையாகப் பின்பற்றுவது குறித்த ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

கலால் துறையில் துணை ஆணையர் மேத்யூ பிரான்சிஸ் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அதில் பங்கேற்ற கலால் துறை துணை ஆணையர் கூறுகையில், 'மதுபானத் தொழிற்சாலை உரிமையாளர்களுக்குப் பின்வரும் முக்கியக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. மதுபானத் தொழிற்சாலைகள் நிர்ணயிக்கப்பட்ட நேரத்தைத் தாண்டி இயங்கக்கூடாது.

தினமும் மாலை 5:30 மணிக்கு தொழிற்சாலைகள் மூடப்பட வேண்டும். அனைத்து தொழிற்சாலைகளிலும் சி.சி.டி.வி., கேமராக்கள் கட்டாயம் பொருத்தப்பட்டு, செயல்பாட்டில் இருக்க வேண்டும். தினமும் உற்பத்தியாகும் மதுபானங்களின் அளவை உடனுக்குடன் கலால் துறைக்குத் தெரிவிக்க வேண்டும்.

வெளிமாநிலங்களுக்கு அனுப்பப்படும் மதுபானங்கள் காலையில் மட்டுமே அனுப்பப்பட வேண்டும். மதுபானங்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களில் ஜி.பி.எஸ்., கருவி பொருத்தப்படுவது கட்டாயம். நிர்ணயிக்கப்பட்ட விலையை விடக் கூடுதலாக விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

காலாவதியான மற்றும் சேதமடைந்த மதுபானங்களை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும். அனைத்துத் தொழிற்சாலைகளும் தங்களது மாதாந்திர அறிக்கையைத் தவறாமல் சமர்ப்பிக்க வேண்டும்.

தேர்தல் நேரத்தில் மதுபானங்கள் முறைகேடாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்கவும், நன்னடத்தை விதிகளை உறுதிப்படுத்தவும் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக' தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us