நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: புதுச்சேரி, பாரதி பூங்கா அருகேயுள்ள வர்த்தக சபையில், தமிழ்நாடு கைத்திறன் தொழில்கள் மற்றும் வளர்ச்சி கழகம், பூம்புகார் விற்பனை நிலையம் சார்பில் கைவினைப் பொருட்கள் கண்காட்சி மற்றும் விற்பனை மையம் நேற்று துவங்கியது.
கண்காட்சியை சீனியர் எஸ்.பி., கலைவாணன் தலைமை தாங்கி, திறந்து வைத்து பார்வையிட்டார். இக்கண்காட்சியில் 15-க்கும் மேற்பட்ட கைவினை கலைஞர்களால் தயாரிக்கப்பட்ட கைவினை பொருள்கள் காட்சிபடுத்தி, விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளனர். வரும் 1ம் தேதி வரை காலை 10:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை நடக்கும் கண்காட்சியில் கைவினை பொருட்கள், கைத்தறி துணிகள், நகைகள் மற்றும் கைவினைப் பரிசுப் பொருட்கள் உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன.

