/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஆச்சாரியா கல்லுாரியில் மாணவர் எக்ஸ்னோரா
/
ஆச்சாரியா கல்லுாரியில் மாணவர் எக்ஸ்னோரா
ADDED : செப் 09, 2025 06:39 AM

புதுச்சேரி : வில்லியனுார் ஆச்சாரியா பொறியியல் தொழில் நுட்பக் கல்லுாரியில் மாணவர் எக்ஸ்னோரா துவக்க விழா நடந்தது.
கல்லுாரி நிறுவனர் அரவிந்தன் தலைமை தாங்கினார். தொழில்நுட்ப கல்லுாரி முதல்வர் குருலிங்கம், ஆச்சாரியா கலை மற்றும் அறிவியல் கல்லுாரி இடைக்கால முதல்வர் நேத்ர பிரகாஷ் முன்னிலை வகித்தனர்.
திருச்சி குழந்தைகள் நலக்குழுத் தலைவர் மோகன் பெரியண்ணாசாமி முதன்மை விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்கள் சுற்றுச்சூழல் பிரச்னைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல், இயற்கை வளா கங்களை பாதுகாத்தல், சமுதாய முன்னேற்றத்தில் ஆற்ற வேண்டிய பங்குகள் குறித்து விளக்கினார்.
புதுச்சேரி எக்ஸ்னோரா இண்டர்நேஷனல் கவுரவத் தலைவர் உதயகுமார், தலைவர் பிரபு, லேர்னிங் அகாடமி இயக்குனர் ராஜகுமாரன் ஆகியோர் கலந்து கொண்டு எதிர்கால நடவடிக்கைகள் குறித்து பேசினர்.
நிகழ்ச்சியில் ஆசிரியர்கள், மாணவர்கள் பங்களிப்புகள் குறித்து பாராட்டப்பட்டன. நிகழ்ச்சியின் நோக்கம் மாணவர்களை சுற்றுச்சூழல் பாதுகாப்பு, சமூகப் பொறுப்பு மற்றும் சமூக மேம்பாட்டில் ஈடுபட செய்வதாகும்.