/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சைக்கிளில் சென்று ஆய்வு; காரைக்கால் கலெக்டர் அதிரடி
/
சைக்கிளில் சென்று ஆய்வு; காரைக்கால் கலெக்டர் அதிரடி
சைக்கிளில் சென்று ஆய்வு; காரைக்கால் கலெக்டர் அதிரடி
சைக்கிளில் சென்று ஆய்வு; காரைக்கால் கலெக்டர் அதிரடி
ADDED : நவ 18, 2024 07:07 AM

காரைக்கால் ; காரைக்காலில் குப்பை அகற்றும் பணியை கலெக்டர் மணிகண்டன் சைக்கிளில் சென்று ஆய்வு நடத்தினார்.
காரைக்கால் மாவட்டத்தில் நகர பகுதி சாலைகளில் சரியாக குப்பைகள் அகற்றப்படவில்லை என புகார்கள் வந்தது. இதைத் தொடர்ந்து, நேற்று காலை 7:00 மணிக்கு கலெக்டர் மணிகண்டன், சைக்கிளில் புறப்பட்டு, நகர பகுதியில் தேங்கி கிடக்கும் குப்பைகள் குறித்து ஆய்வு செய்தார்.காரைக்கால் காமராஜர் சாலை, திருநகர், பெரியபேட், கல்லறைபேட் உள்ளிட்ட பகுதி மக்களிடம் தினசரி குப்பை அகற்றப்படுகிறதா என கேட்டறிந்தார்.
துப்புரவு பணியாளர்களிடம் சாலைகளில் குப்பை தேங்க விட கூடாது. மழைக்காலம் என்பதால் குப்பைகள் வாய்க்காலில் சென்று அடைத்து கொள்ளும். குப்பைகளை தேங்க விடாமல் பார்த்து கொள்ள அறிவுறுத்தினார்.
பின், கலெக்டர் கூறுகையில், 'குப்பைகள் சரியாக அகற்றவில்லை என புகார் வந்தது.
சைக்கிளில் சென்று ஆய்வு செய்தேன். நகர பகுதியில் 90 சதவீதம் குப்பைகள் அள்ளப்படுகிறது. சில இடங்களில் மட்டும் குப்பை உள்ளது. சில இடங்களில் மட்டும் கழிவுநீர் வாய்க்கால்களை சுத்தம் செய்ய எச்.ஆர். ஸ்கொயர் நிறுவனத்திடம் கூறியுள்ளேன்' என்றார்.