ADDED : ஜன 03, 2026 04:40 AM
புதுச்சேரி: போக்குவரத்துறை ஆணையர் அமன் சர்மா செய்திக்குறிப்பு:
புதுச்சேரி போக்குவரத்து துறையின் பி.ஒய் -02 இசட் (காரைக்கால்) வரிசையில் உள்ள பேன்சி எண்களை https://parivahan.gov.in/fancy இணையதளத்தில் வரும் 5ம் தேதி காலை 11:00 மணி முதல் 13ம் தேதி மாலை 4:30 வரை ஏலம் விடப்பட உள்ளது.
ஏலத்தில் பங்கு பெற https://parivahan.gov.in/fancy இணையதளத்தில் வரும் 5ம் தேதி முதல் 12ம் தேதி வரை பதிவு செய்து கொள்ளலாம். பதிவு செய்தவர்கள் தங்களுக்கு தேவையான எண்களை தேர்வு செய்து அதற்கான அடிப்படை தொகையை செலுத்த வேண்டும். பணம் செலுத்தியவர்கள் மட்டும் ஏலத்தில் கலந்து கொள்ளலாம்.
இந்த இ-ஆக் ஷன் முறையில் பங்கு பெற விரும்பும் பொதுமக்கள் அதற்கான வழிமுறைகள் மற்றும் ஏல நிபந்தனைகளை வரும் 5ம் தேதி முதல் https://transport.py.gov.in என்ற இணையதள முகவரியில் பார்த்தும், பதிவு இறக்கமும் செய்துகொள்ளலாம். மேலும் விபரங்களுக்கு 0413- 2280170, 236 எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
முன்பதிவு செய்யப்பட்ட வாகன எண்ணை 90 நாட்களுக்குள் பதிவு செய்ய தவறினால் அத்தகைய முன்பதிவு செயலிழந்துவிடும்.
பண பரிவர்த்தனை அனைத்தும் ஆன்லைன் பேமென்ட் மூலம் பெறப்படும். நேரிலோ, காசோலையாகவோ ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

