நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாகூர்: பிரதம மந்திரி கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டம் மற்றும் புதுச்சேரி அரசு திட்டத்தின் கீழ், ஏம்பலம், அரங்கனுார் மாரியம்மன் கோவில் பஸ் நிறுத்தத்தில் இருந்து சேலியமேடு - டி.என்.பாளையம் இணைப்பு சாலை, குடியிருப்புபாளையம் தாங்கல் சாலை வரை1 கோடியே 27 லட்சத்து 96 ஆயிரத்தில் புதுப்பிக்க நிதி ஒதுக்கப்பட்டது.
பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து சார்பில், 13 லட்சத்து 94 ஆயிரத்து 610 ரூபாயில், அரங்கனுாரில் ராஜகணபதி நகர், ராஜா நகர், ராஜா நகர் விரிவாக்கம், பால விநாயகர் நகரில் சாலை அமைக்க நிதி ஒதுக் கப்பட்டது. இப்பணிகளை லட்சுமிகாந்தன் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார்.

