/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மீனவர் கொலை வழக்கு : 7 பேரிடம் விசாரணை
/
மீனவர் கொலை வழக்கு : 7 பேரிடம் விசாரணை
ADDED : ஜன 03, 2026 04:40 AM
புதுச்சேரி: மீனவரை கல்லால் அடித்து கொலை செய்த வழக்கில் வாலிபர்கள் 7 பேரை போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர்.
புதுச்சேரி, வைத்திகுப்பத்தை சேர்ந்தவர் செந்தில், 38; மீனவர். இவர், கடந்த 31ம் தேதி இரவு புதுச்சேரி கடற்கரை சாலையில் நடந்த புத்தாண்டு கொண்டாட்டத்தில் கலந்து கொண்டு நள்ளிரவு 1:00 மணிக்கு வீட்டிற்கு சென்றார்.
அப்போது, அதே பகுதியை சேர்ந்த 20 வயதிற்குட்பட்ட 7 வாலிபர்கள் புதுச்சேரி கடற்கரையில் நடந்த புத்தாண்டு கொண்டாட்டத்தை முடித்துக் கொண்டு வீட்டிற்கு பைக்கில் புறப்பட்டனர். மது மற்றும் கஞ்சா போதையில் இருந்த வாலிபர்கள் பைக்கை அதிவேகமாக ஓட்டிக் கொண்டு கூச்சலிட்டபடி சென்றனர்.
அதனை வீட்டின் முன் நின்றுக் கொண்டிருந்த செந்தில் கண்டித்தார். இதனால் செந்திலுக்கும் அந்த வாலிபர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இந்நிலையில் செந்திலை அந்த வாலிபர்கள் 7 பேரும் கற்கலால் தாக்கி கொலை செய்தனர்.
புகாரின் பேரில், முத்தியால்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து, வாலிபர்கள் 7 பேரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.

