ADDED : செப் 21, 2024 12:26 AM

திருபுவனை: திருபுவனை விவசாயிகள் கூட்டுறவு சங்கத்தில் முறைகேட்டை கண்டித்து அகில இந்திய விவசாயிகள் சங்கம் சார்பில், ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாநிலக்குழு உறுப்பினர் நாகராஜ் தலைமை தாங்கினார். கொம்யூன் கமிட்டி செயலாளர் முத்து, மாநில செயலாளர் சங்கர், கமிட்டி தலைவர் ராமச்சந்திரன், பாலசந்தர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மா.கம்யூ., புதுச்சேரி பிரதேச செயலாளர் ராஜாங்கம், கொம்யூன் செயலாளர் அன்புமணி கண்டன உரையாற்றினர்.
திருபுவனை விவசாயிகள் சேவை கூட்டுறவு சங்கத்தில் முறைகேட்டில் ஈடுபட்டவர்களை கைது செய்ய வேண்டும். விவசாயிகளுக்கான மானிய விலை உரத்தை தனியாருக்கு விற்று மோசடி செய்தவர்களை கைது செய்யவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.
வி.சி.,தொகுதி செயலாளர் ஈழவளவன், கரும்பு விவசாயிகள் சங்க நிர்வாகி வடிவேல் உட்பட பலர் பங்கேற்றனர்.