ADDED : செப் 08, 2026 09:00 PM

புதுச்சேரி: வீட்டில் இருந்து வெளியில் சென்ற மகளை காணவில்லை என தந்தை போலீசில் புகார் செய்தார்.
புதுச்சேரி திலாசுபேட்டை வீமன் நகரை சேர்ந்தவர் முருகேசன் மகள் தனலட்சுமி, 21; இவர் கடந்த 19ம் தேதி வீட்டில் இருந்து வெளியில் சென்றார். மாலை வரை வராததால் பல்வேறு இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை.
இதுகுறித்து, அவரது தந்தை கொடுத்த புகாரின் பேரில் டி.நகர். போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காரைக்கால் காரைக்கால் நெடுங்காடு நல்லாத்துார் பகுதியை சேர்ந்தவர் குமணன், இவரது மகள் ஸ்ரீநிதி, 19; இவர் லாஸ்பேட்டையில் உள்ள அரசு பொறியியல் கல்லுாரியில் 3ம் ஆண்டு இன்ஜினியரிங் படித்து வருகிறார்.
அப்பகுதியில் உள்ள மகளிர் விடுதியில் தங்கி படித்து வரும் இவர், வார விடுமுறை நாட்களில் வீட்டுக்கு செல்வது வழக்கம்.
கடந்த 23ம் தேதி வீட்டில் இருந்து கிளம்பி விடுதிக்கு செல்வதாக கூறி விட்டு சென்றார். அவரது மொபைலில் பெற்றோர் தொடர்பு கொண்ட போது, சுவிட்சு ஆப் செய்யப்பட்டிருந்தது. விடுதி நிர்வாகத்தினரிடம் கேட்ட போது, கண்ணுக்கு மருந்துவ சிகிச்சை பெற வீட்டுக்கு செல்வதாக விடுதியில் லீவு போட்டு விட்டு, கடந்த 31ம் தேதி சென்றார் . அவர் வீட்டுக்கு வராததால், உறவினர்களின் வீடுகள் உள்ளிட்ட பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து, புகாரின் பேரில், லாஸ்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
