ADDED : ஆக 21, 2026 06:13 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: வேலைக்கு சென்ற தந்தையை காணவில்லை என மகன் போலீசில் புகார் செய்தார்.
நைனார்மண்டபத்தை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி,67; அரியாங்குப்பத்தில் உள்ள கார் கம்பெனி செக்யூரிட்டி. கடந்த 17ம் தேதி வேலைக்கு செல்வதாக தனது மனைவியிடம் கூறிவிட்டு சென்றார்.
இந்நிலையில், அவர், இரு சக்கர வாகனத்தை முருங்கப்பாக்கத்தில் நிறுத்தியுள்ளேன் எடுத்து கொள்ளவும். என்னை தேட வேண்டாம். அம்மாவை பார்த்துக் கொள்ளவும் என, தனது மகன் மொபைல் போனுக்கு மொசேஜ் அனுப்பி விட்டு, மொபைலை சுவிட்ஸ் ஆப் செய்து விட்டு சென்றுள்ளார்.
அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து, அவரது மகன் சாந்தகுமார் கொடுத்த புகாரின் பேரில், முதலியார்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
