ADDED : ஆக 21, 2026 06:13 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: கம்யூ., மூத்த தலைவர் ஜீவானந்தம் பிறந்த நாளையொட்டி, அவரது சிலைக்கு அமைச்சர் சிவக்கொழுந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
செய்தி மற்றும் விளம்பரத் துறை சார்பில், மறைந்த கம்யூ., மூத்த தலைவர் ஜீவானந்தம் பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. சாரம் அவ்வை திடலில் உள்ள அவரது சிலைக்கு அரசு சார்பில், அமைச்சர் சிவக்கொழுந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். முன்னாள் அமைச்சர் விஸ்வநாதன், முன்னாள் எம்.எல்.ஏ., நாராகலைநாதன், இந்திய கம்யூ., செயலாளர் சலீம், இலக்கிய அமைப்புகளை சேர்ந்தவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு, ஜீவானந்தம் சிலைக்கு மாலை அணிவித்து, மலர் துாவி மரியாதை செய்தனர்.
