/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
உரம் தயாரிப்பு தொழில்நுட்பம் விவசாயிகளுக்கு விளக்கம்
/
உரம் தயாரிப்பு தொழில்நுட்பம் விவசாயிகளுக்கு விளக்கம்
உரம் தயாரிப்பு தொழில்நுட்பம் விவசாயிகளுக்கு விளக்கம்
உரம் தயாரிப்பு தொழில்நுட்பம் விவசாயிகளுக்கு விளக்கம்
ADDED : டிச 20, 2025 06:21 AM

திருக்கனுார்: மணக்குள விநாயகர் வேளாண் கல்லுாரி மாணவிகள், உரம் செய்யும், தொழில்நுட்பங்கள் குறித்து விவசாயிகளுக்கு விளக்கம் அளித்தனர்.
திருக்கனுார் அடுத்த செட்டிப்பட்டு கிராமத்தில், கல்லுாரி மாணவிகள் உரம்செய்யும் பல்வேறு முறைகள் குறித்து, விவசாயிகளுக்கு விளக்கம் அளித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
அதில், வெர்மி கம்போஸ்ட் தயாரிக்கும் முறை, சமையல் கழிவுகளை பயன்படுத்தி கிச்சன் கம்போஸ்ட் தயாரித்தல், வீடுகளில் எளிதில் கிடைக்கும் பொருட்களை பயன்படுத்தி உரம் தயாரிக்கும் முறைகள் பற்றி கல்லுாரி மாணவிகள் தர்ஷினி, இலக்கியா மற்றொரு தர்ஷினி விவசாயிகளுக்கு விளக்கம் அளித்தனர்.
விவசாயம் செய்யும் பெண்கள் ஆர்வத்தோடு கலந்து கொண்டு பயனடைந்தனர்.