விளிம்பு நிலை குழந்தைகள் நீதிமன்றத்திற்கு களப்பயணம்
விளிம்பு நிலை குழந்தைகள் நீதிமன்றத்திற்கு களப்பயணம்
UPDATED : நவ 12, 2026 07:22 PM
ADDED : நவ 12, 2026 07:18 PM

புதுச்சேரி: புதுச்சேரி நீதிமன்றத்தில் நீதிபதிகளுடன் கலந்துரையாடிய விளிம்பு நிலை குழந்தைகள் கேக் வெட்டி குழந்தைகள் தின விழாவை கொண்டாடினர்.
குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, பிளாஸ்டிக்ஸ் பார் சேஞ்ச் நிறுவனம் சார்பில், லாஸ்பேட்டை மற்றும் மரக்காணம் பகுதிகளைச் சேர்ந்த நரிக்குறவர் விளிம்பு நிலை குழந்தைகள் 40 பேர், புதுச்சேரி நீதிமன்றத்திற்கு சிறப்பு களப்பயணம் மேற்கொண்டனர்.
இந்தப் பயணத்தின் ஒரு பகுதியாக, குழந்தைகள் புதுச்சேரி நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி மற்றும் சார்பு நீதிபதி ஆகியோரை சந்தித்து உரையாடினர்.
நீதிபதிகளும் குழந்தைகளுடன் கலந்துரையாடி வாழ்த்துகளைப் பகிர்ந்து கொண்டனர். பின், குழந்தைகளுடன் இணைந்து கேக் வெட்டினர்.
சமூகப் பின்னணி எதுவாக இருந்தாலும் ஒவ்வொரு குழந்தைக்கும் கல்வி, சம உரிமைகள் மற்றும் சமூகத்தில் சமமான வாய்ப்புகள் கிடைக்க வேண்டும் என்பதை உணர்த்துவதற்காக இந்த சிறப்பு களப்பயணம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
தலைமை நீதிபதி ஆனந்த், மாவட்ட இலவச சட்டப் பணிகள் ஆணைகுழு உறுப்பினர் செயலர் அம்பிகா, சார்பு நீதிபதி சவுந்தர்யா, மாவட்ட இலவச சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் செயலர் ரமேஷ் மற்றும் வழக்கறிஞர்கள், நீதிமன்ற ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
