ADDED : ஜன 09, 2026 05:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெட்டப்பாக்கம்: புதுச்சேரி, மடுகரை பகுதியில்(ஸ்பைன் வுட்) தனியார் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த பிரசாந்தா ஸ்வைன், 31 , என்பவர் வெல்டராக உள்ளார்.
நேற்று முன்தினம் மரத்துாள் கொட்டும் இயந்திரத்தின் மீது வெல்டிங் செய்து கொண்டிருக்கும் போது மரத்துாள் தீப்பிடித்தது. இந்த தீ விபத்தில் பிரசாந்தா ஸ்வைன் படுகாயம் அடைந்தார். அவரை சக ஊழியர்கள் மீட்டு, ஜிப்மரில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மடுகரை போலீசார் விசாரிக்கின்றனர்.

