தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/தீ பிடித்து எரிந்த மின்கம்பம் மரப்பாலத்தில் திடீர் பரபரப்பு

தீ பிடித்து எரிந்த மின்கம்பம் மரப்பாலத்தில் திடீர் பரபரப்பு

தீ பிடித்து எரிந்த மின்கம்பம் மரப்பாலத்தில் திடீர் பரபரப்பு


UPDATED : நவ 23, 2026 11:26 PM

ADDED : நவ 23, 2026 11:26 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 23, 2026 11:26 PM ADDED : நவ 23, 2026 11:26 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: மரப்பாலம் சந்திப்பு அருகே சென்டர் மீடியனில் இருந்த மின்கம்பத்தின் கேபிள் நேற்றிரவு திடீரென தீபிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

புதுச்சேரி மரப்பாலம் சிக்னல் சந்திப்பு பகுதியில் சாலையின் நடுவே உள்ள சென்டர் மீடியனில், மின்விளக்குகளுக்கான மின்கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. நேற்றிரவு 9:00 மணியளவில் மரப்பாலம் சந்திப்பு, வேல்ராம்பட்டு பஸ் நிறுத்தம் அருகே சென்டர் மீடியனில் இருந்த ஒரு மின்கம்பத்தின் புதைவட கேபிள் திடீரென தீப்பிடித்து எரிந்தது.

அப்போது, லேசான மழை பெய்து கொண்டிருந்ததால், வாகன ஓட்டிகள் அச்சத்துடன் சாலையை கடந்து செல்லும் சூழல் ஏற்பட்டது.

தகவலறிந்த மின்துறை மற்றும் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திறகு விரைந்து சென்று, மின் இணைப்பைத் துண்டித்து தீயை அணைத்தனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us