/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
விசைபடகு கட்டுமான பணியின் போது தீவிபத்து
/
விசைபடகு கட்டுமான பணியின் போது தீவிபத்து
ADDED : பிப் 19, 2024 04:57 AM

காரைக்கால்: காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தில் விசைபடகு கட்டுமான பணியில் தீபிடித்து ரூ.50லட்சம் மதிப்பில் பொருட்கள் எரிந்து சேதம்.
காரைக்கால் மீன்பிடிதுறைமுகத்தின் அருகே விசைப்படகுகள் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் தமிழகத்தை சேர்ந்த மீனவரின் விசைப்படகு கட்டுமான பணி 50சதவீதம் முடிவடைந்த நிலையில் நேற்று வெல்டிங் பணி செய்யும் போது தீடீரென தீ விபத்து ஏற்பட்டது.
சகமீனவர்கள் தீயை அணைக்க முயன்றனர். காற்றின் வேகம் காரணமாக தீயை கட்டுப்படுத்த முடியவில்லை.
தகவல் அறிந்த தீயணைப்பு நிலைய அதிகாரி மாரிமுத்து தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் 2 தீயணைப்பு வாகனங்கள் உதவியுடன் இரண்டு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இதில் ரூ.50லட்சம் மதிப்பில் பொருட்கள் எரிந்து சேதமானது. நிரவி போலீசார் வழக்கு பதிவுசெய்து விசாரித்து வருகின்றனர்.
மணலில் சிக்கிய தீயணைப்பு வாகனம்
தீயை அணைக்க சென்ற தீயணைப்பு வாகனம் மணலில் சிக்கியதால் தீயணைப்பு வாகனத்தை வெளியில் எடுக்கமுடியவில்லை . பொக்லைன் இயந்திரம் மூலம் தீயணைப்பு வாகனத்தை மீட்டு சம்பவ இடத்திற்கு சென்றனர்.
கட்டுமான பணியின் போது விசைப்படகு தீப்பிடித்து எரிந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரப்பரப்பு ஏற்பட்டது

