/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பதவி உயர்வில் பாரபட்சம் தீயணைப்பு வீரர்கள் புலம்பல்
/
பதவி உயர்வில் பாரபட்சம் தீயணைப்பு வீரர்கள் புலம்பல்
பதவி உயர்வில் பாரபட்சம் தீயணைப்பு வீரர்கள் புலம்பல்
பதவி உயர்வில் பாரபட்சம் தீயணைப்பு வீரர்கள் புலம்பல்
ADDED : டிச 08, 2024 04:49 AM
புதுச்சேரியில் கடந்த 1962ம் ஆண்டு தீயணைப்பு நிலையம் உருவாக்கப்பட்டது. தற்போது புதுச்சேரியில் 9, காரைக்காலில் 2, மாகி, ஏனாமில் தலா 1 தீயணைப்பு நிலையம் என, மொத்தம் 13 தீயணைப்பு நிலையங்கள் உள்ளன. இதில், 150க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் பணியாற்றி வருகின்றனர்.
கடந்த 2001ம் ஆண்டு 55 பேர் தீயணைப்பு நிலையத்தில் பணியில் சேர்ந்தனர். 24 ஆண்டுகள் கடந்தும் இதுவரை தீயணைப்பு வீரர்களாக பணியாற்றி வருகின்றனர். ஆனால் 2005ம் ஆண்டு புதுச்சேரியில் ஐ.ஆர்.பி.என்., உருவாக்கப்பட்டது.
போலீசாருக்கு 10, 15, 25 ஆண்டு பணியாற்றினால் வழங்கப்படும் பதவி உயர்வு, ஐ.ஆர்.பி.என்., போலீசாருக்கும் வழங்கப்பட்டது. அதுபோல் தங்களுக்கும் சம்பளம் இன்றி, 10 ஆண்டுகள் பணி முடித்த வீரர்களுக்கு முதன்மை தீயணைப்பு வீரர் (லீடிங் பையர் மேன்), 15 ஆண்டு அனுபவம் பெற்றவர்களுக்கு உதவி அலுவலர் (சப் ஆபிசர்), 25 ஆண்டுகள் பணி முடித்தவர்களுக்கு 2 www--ஸ்டாருடன் நிலைய அதிகாரி பதவி உயர்வுக்கான சீருடை அணிந்து கொள்ள தீயணைப்பு வீரர்கள் கோரிக்கை விடுத்தனர்.
அதற்கு வேறு எந்த மாநிலத்திலும் இதுபோன்ற பதவி உயர்வுக்கான வழிகாட்டுதல்கள் இல்லை என அரசு கைவிரித்து விட்டது.
நாடு முழுதும் ஐ.ஆர்.பி.என்., போலீசாருக்கும் பதவி உயர்வு வழங்க எந்தவித ஆணையும், வழிகாட்டுதல்களும் இல்லை. ஆனால், ஐ.ஆர்.பி.என்., களுக்கு பதவி உயர்வு வழங்க அரசுக்கு மனசு இருக்கு, தீயணைப்பு வீரர்களுக்கு வழங்க மனசு இல்லை என ஆதங்கத்தை கொட்டி வருகின்றனர்.