/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
உதவியாளர் பணிக்கு முதல்நிலை தேர்வு
/
உதவியாளர் பணிக்கு முதல்நிலை தேர்வு
ADDED : ஏப் 28, 2025 04:39 AM

புதுச்சேரி: பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்த துறையில்,உதவியாளர் பணிக்குமுதல்நிலை தேர்வு, 84 மையங்களில் நேற்று நடந்தது.
புதுச்சேரி, பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்த துறையில், 256 உதவியாளர் பணிக்கு, 32 ஆயிரத்து 829 பேர் விண்ணப்பித்திருந்தனர்.
இந்த பணிக்கான முதல்நிலை தேர்வு, நேற்று காலை 10:00 மணி முதல், 12:00 மணி வரை,புதுச்சேரி, காரைக்கால், ஏனாம், மாகி ஆகிய 84 மையங்களில் நடந்தது.
இதில், ஆண்கள், 11 ஆயிரத்து 934 பேர், பெண்கள் 10 ஆயிரத்து 926 பேர் என,மொத்தம் 22 ஆயிரத்து 860 பேர் தேர்வு எழுதினர். இது 69.93 சதவீதம் ஆகும். 9 ஆயிரத்து 832 பேர் தேர்வுக்கு வரவில்லை.
தேர்வு எழுத வந்தவர்கள், மையத்தின் முன்பு, கைரேகை பதிவு செய்த பின், அனுமதிக்கப்பட்டனர். காலை 9:30 மணிக்கு பின் வந்த தேர்வர்கள் அனுமதிக்கப்படவில்லை. பேனா, நுழைவுச்சீட்டு, அசல் அடையாள அட்டை மட்டுமே தேர்வு மையத்திற்கு எடுத்து செல்ல அனுமதித்தனர்.
மேலும், கைப்பை, மொபைல் போன், புளுடூத்,ஹெட்போன்கள், கால்குலேட்டர் உள்ளிட்ட எலக்ட்ரானிக் சாதனங்கள் எடுத்து செல்வதற்கு தடைவிதிக்கப்பட்டது. தேர்வு அறைகளில் சி.சி.டி.வி., கேமராக்கள் பொருத்தப்பட்டு, கண்காணிக்கப்பட்டது.
போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

