/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
2 நாள் கடலுக்கு செல்ல வேண்டாம் மீனவர்களுக்கு வேண்டுகோள்
/
2 நாள் கடலுக்கு செல்ல வேண்டாம் மீனவர்களுக்கு வேண்டுகோள்
2 நாள் கடலுக்கு செல்ல வேண்டாம் மீனவர்களுக்கு வேண்டுகோள்
2 நாள் கடலுக்கு செல்ல வேண்டாம் மீனவர்களுக்கு வேண்டுகோள்
ADDED : ஜூலை 26, 2025 08:10 AM
புதுச்சேரி : புதுச்சேரி, காரைக்கால் மீனவர்கள் இரண்டு நாட்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என, மீனவளத்துறை இயக்குனர் முகமது இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய அறிக்கையின்படி, வங்க கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த பகுதி உருவாகியுள்ளதால் தமிழுக கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ., வேகத்திலும் இடையிடையே 60 கி.மீ., வேகத்திலும் வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, இரண்டு நாள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லும் புதுச்சேரி, காரைக்கால் மீனவர்கள் விசைப்படகுகள், பைபர் படகுகள் மற்றும் கட்டுமரங்களில் அதிக காற்று வீசும் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம். பாதுகாப்பாக மீன்பிடி தொழிலை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. வானிலை எச்சரிக்கை, சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய அறிவிப்பிற்கு ஏற்ப மாறுபடும் என்பதால், வானிலை எச்சரிக்கைகளை தொடர்ந்து கவனித்து வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில், கூறப்பட் டுள்ளது.