/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
70 எஸ்.ஐ., பணியிடங்களுக்கான உடற்தகுதி தேர்வு இன்று துவக்கம்
/
70 எஸ்.ஐ., பணியிடங்களுக்கான உடற்தகுதி தேர்வு இன்று துவக்கம்
70 எஸ்.ஐ., பணியிடங்களுக்கான உடற்தகுதி தேர்வு இன்று துவக்கம்
70 எஸ்.ஐ., பணியிடங்களுக்கான உடற்தகுதி தேர்வு இன்று துவக்கம்
ADDED : ஜன 19, 2026 04:57 AM
புதுச்சேரி: புதுச்சேரியில் 70 சப் இன்ஸ்பெக்டர் பணிக்கான உடற்தகுதி தேர்வு இன்று துவங்குகிறது.
போலீஸ் துறை சிறப்பு அதிகாரி ஏழுமலை செய்திக்குறிப்பு:
போலீஸ் துறையில் காலியாக உள்ள 70 சப் இன்ஸ்பெக்டர் பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ளது. இதற்காக ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு, அதில் 16 ஆயிரத்து 473 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டன. இவர்களுக்கான உடல் தகுதி தேர்வு கோரிமேடு ஆயுதப்படை பயிற்சி மைதானத்தில் இன்று துவங்கி, பிப்., 7ம் தேதி வரை நடக்கிறது.
இதில் ஆண்களுக்கு இன்று முதல் பிப்., 3ம் தேதி வரையும். பெண்களுக்கு பிப்., 4ம் தேதி முதல் 7ம் தேதி வரையும் தேர்வு நடக்கிறது. தேர்வுக்கு வருவோர் ஹால் டிக்கெட்டுடன் அரசின் புகைப்பட அடையாள சான்றாக அசல் ஆதார், ஓட்டுனர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்று கொண்டு வர வேண்டும்.
முதல் நாளான இன்று 1,000 பேர் அழைக்கப்பட்டுள்ளனர். ஹால் டிக்கெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள இடம், தேதி மற்றும் நேரத்தில் மட்டுமே உடல் தகுதி தேர்விற்கு வர வேண்டும். குறைந்தது 30 நிமிடங்களுக்கு முன் தேர்வு நடக்கும் இடத்திற்கு வர வேண்டும்.
தேர்வு நடைபெறும் இடத்திற்கு மொபைல் போன்கள், மின்னணு சாதனங்கள் உணவுப் பொருட்கள் கொண்டு வரதடை செய்யப்பட்டுள்ளது. முறைகேடுகளில் ஈடுபடுபவர்கள் உடனடியாக மைதானத்திலிருந்து வெளியேற்றப்படுவர்.
செயல்திறனை அதிகரிக்கும் ஸ்டராய்டு மருந்துகளை பயன்படுத்தினால் அல்லது ஒழுக்கமற்ற நடத்தைகளில் ஈடுபட்டால் அவர்கள் தகுதி நீக்கம் செய்யப்படுவர்.
ஆண்களுக்கான உடல் தகுதி தேர்வில் உயரம் 165 செ.மீ., மார்பளவு 81 -- 86 செ.மீ., இருக்க வேண்டும். 100 மீட்டர் துாரத்தை 15 வினாடிகளில் ஓடி கடக்க வேண்டும். 3.80 மீட்டர் நீளம், 1.20 மீட்டர் உயரம் தாண்ட வேண்டும். 800 மீட்டர் துாரத்தை 2 நிமிடம் 50 வினாடிகளில் ஓடி கடக்க வேண்டும்.
பெண்கள் 154 செ.மீ., உயரம், எடை 45 கிலோ இருக்க வேண்டும். 100 மீட்டர் துாரத்தை 16.50 வினாடிகளில் ஓடி கடக்க வேண்டும். நீளம் தாண்டுதலில் 3.25 மீட்டர் துாரமும், 1.05 மீட்டர் உயரமும் தாண்ட வேண்டும். 200 மீட்டர் துாரத்தை 36 வினாடிகளில் ஓடி கடக்க வேண்டும். இதனை நிறைவு செய்பவர்கள் எழுத்துத் தேர்வுக்கு தகுதி பெறுவர்.இவ்வாறு தெரிவித்துள்ளார்.

