/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுவையில் புதுமாப்பிள்ளையை அடித்து கொன்ற ஐவர் கைது
/
புதுவையில் புதுமாப்பிள்ளையை அடித்து கொன்ற ஐவர் கைது
புதுவையில் புதுமாப்பிள்ளையை அடித்து கொன்ற ஐவர் கைது
புதுவையில் புதுமாப்பிள்ளையை அடித்து கொன்ற ஐவர் கைது
ADDED : ஜூலை 23, 2025 02:40 AM

நெட்டப்பாக்கம்:புதுச்சேரியில் புது மாப்பிள்ளையை அடித்து கொன்ற ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி, பனையடிகுப்பம், வையாபுரி நகரை சேர்ந்தவர் ராஜகுரு, 34. இவர், அதே பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் குளிப்பதை எட்டிப்பார்த்ததாக, இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த தினேஷ்பாபு, 27, என்பவருக்கும் முன் விரோதம் உள்ளது.
கடந்த, 19ல் நள்ளிரவு ராஜகுரு, தினேஷ்பாபு இடையே தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த தினேஷ்பாபு, அவரது கூட்டாளிகள் சர்மா, 24, முகிலன், 20, சுமித் 20, அச்சுதன், 24, ஆகியோர் ராஜகுருவை இரும்பு சேர், உருட்டு கட்டையால் தாக்கி, பனையடிக்குப்பம் சாலையில் உள்ள மீன்குட்டை அருகே வீசி சென்றனர்.
கரையாம்புத்துார் போலீசார், ராஜகுருவை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். போலீசார் கொலை முயற்சி வழக்கு பதிந்து, தினேஷ்பாபு உட்பட, ஐந்து பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதனிடையே, சிகிச்சை பலனின்றி ராஜகுரு நேற்று காலை இறந்தார். போலீசார், கொலை வழக்காக மாற்றி, சிறையில் உள்ள ஐந்து பேரை காவலில் எடுத்து விசாரிக்கின்றனர்.
ராஜகுரு இறந்ததையடுத்து பனையடிக்குப்பத்தில் பதற்றம் நிலவுகிறது. ராஜகுருவுக்கு நான்கு மாதங்களுக்கு முன் திருமணம் நடந்தது. அவரது மனைவி, மூன்று மாத கர்ப்பிணியாக உள்ளார்.