sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

சங்கராபரணி ஆற்றில் வெள்ளம் கிராமங்கள் துண்டிப்பு: மக்கள் அவதி

/

சங்கராபரணி ஆற்றில் வெள்ளம் கிராமங்கள் துண்டிப்பு: மக்கள் அவதி

சங்கராபரணி ஆற்றில் வெள்ளம் கிராமங்கள் துண்டிப்பு: மக்கள் அவதி

சங்கராபரணி ஆற்றில் வெள்ளம் கிராமங்கள் துண்டிப்பு: மக்கள் அவதி


ADDED : டிச 03, 2024 06:23 AM

Google News

ADDED : டிச 03, 2024 06:23 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருக்கனுார்: சங்கராபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கள் ஏற்பட்ட மணலிப்பட்டு- கூனிச்சம்பட்டு, கொடுக்கூர்- திருவக்கரை கிராமங்கள் இடையே போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

புயல் எதிரொலியால் பெய்த கனமழை காரணமாக வீடூர் அணை திறக்கப்பட்டது. இதனால், புதுச்சேரி சங்கராபரணி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், புதுச்சேரி எல்லையான மணலிப்பட்டு- கூனிச்சம்பட்டு சங்கராபரணி ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட்டுள்ள மேம்பாலத்தில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால், மணலிப்பட்டு- கூனிச்சம்பட்டு கிராமங்கள் இடையே போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

இதேபோல், தமிழகப் பகுதியான கொடுக்கூர்- திருவக்கரை செல்லும் சாலையிலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால், அக்கிராம மக்கள் 10 கி.மீ., தொலைவிற்கு சுற்றி செல்லும் சூழல் ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையே, மணலிப்பட்டு, செட்டிப்பட்டு சங்கராபரணி ஆற்றின் கரையோரம் அமைக்கப்பட்டிருந்த 3 கோழிப்பண்ணைகள், வெள்ளப்பெருக்கி்ல மூழ்கியது. இதனால், பண்ணைகளில் இருந்த 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோழிகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன.






      Dinamalar
      Follow us