/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
50 சதவீதம் மானிய விலையில் மலர் செடிகள் விற்பனை
/
50 சதவீதம் மானிய விலையில் மலர் செடிகள் விற்பனை
ADDED : பிப் 03, 2026 04:32 AM
புதுச்சேரி: 50 சதவீதம் மானிய விலையில் மலர் செடிகள் இன்று முதல் விற்கப்படும் என வேளாண்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி அரசு வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை கூடுதல் வேளாண் இயக்குநர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:
புதுச்சேரி தாவரவியல் பூங்காவில் கடந்த 30ம் தேதி முதல் 1ம் தேதி வரை 3 நாட்கள் நடந்த மலர் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்ட மலர் செடிகள்.
இன்று செவ்வாய் கிழமை முதல், இரண்டு நாட்களுக்கு அல்லது இருப்பு இருக்கும் வரை அரசின் உரிய ஒப்புதலுடன் 50 சதவீதம் மானிய விலையில் விற்பனை செய்யப்படவுள்ளது. தாவர ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் மானிய விலையில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள மலர் செடிகளை வாங்குவதற்கான வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
பொதுமக்களுக்கு உதவ, தாவரவியல் பூங்காவின் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

