UPDATED : நவ 15, 2026 07:59 PM
ADDED : நவ 15, 2026 07:56 PM
கான்ஃபிடன்டா’ சென்ற எம்.எல்.ஏ.: புதுச்சேரி, பிள்ளையார்குப்பம் – செல்லிப்பட்டு இடையே சங்கராபரணி ஆற்றின் குறுக்கே பிரெஞ்சு காலத்தில் கட்டப்பட்ட படுகை அணை கடந்த 2021ம் ஆண்டு கனமழை மற்றும் வீடூர் அணை திறப்பால் சேதமடைந்தது.
இங்கு புதிய தடுப்பணை அமைப்பதற்கான இடத்தை, திருபுவனை தொகுதி த.வெ.க., எம்.எல்.ஏ., சாய்சரவணன்குமார், பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார்.
அப்போது, அவர், கூறுகையில், ‘ஜல் சக்தி திட்டத்தின் கீழ் ரூ. 306.81 கோடி மதிப்பில் நிரந்தர தடுப்பணை மற்றும் ஆற்றங்கரை பாதுகாப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
இது, செல்லிப்பட்டு – பிள்ளையார்குப்பம் அணை பிரச்னை கிடையாது. ஒட்டுமொத்த புதுச்சேரி மக்களுடைய வாழ்வதாரம்’ என்றவர், ‘நீரின்றி அமையாது உலகு; வானின்றி பெய்யும் மழை’ என, திருக்குறளை தவறாக கூறிவிட்டு, இதற்கு அர்த்தம் பிரதமருக்கும், தமிழக முதல்வர் ஜோசப் விஜய்க்கு தெரியும்’ என்று, புறப்பட்டார்.
அவர் கூறிய திருக்குறள் ‘நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும் வான்இன்று அமையாது ஒழுக்கு’ என்பதே சரியானது. இதை கேட்ட பொது மக்களில் ஒருவர் திருக்குறளை தவறாக கூறிவிட்டு நமது எம்.எல்.ஏ., எவ்வளது ‘கான்ஃபிடன்டா’ போறாரு பாரு... எனக் கூற அருகில் இருந்தவர்கள் சிரித்து மகிழ்ந்தனர்.
