/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
விஜயை பற்றி அவதுாறாக பேசினால் நமச்சிவாயம் தோல்வியை சந்திக்க நேரிடும் முன்னாள் எம்.எல்.ஏ., சாமிநாதன் ஆவேசம்

ADDED : டிச 13, 2025 05:10 AM
புதுச்சேரி: த.வெ.க., தலைவர் விஜயை பற்றி அவதுாறாக அமைச்சர் நமச்சிவாயம் பேசினால் சட்டசபை தேர்தலில் தோல்வியை சந்திக்க நேரிடும் என, முன்னாள் எம்.எல்.ஏ., சாமிநாதன் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர், கூறியதாவது:
த.வெ.க., தலைவர் விஜய், மத்திய அரசு, புதுச்சேரிக்கு போதிய நிதி ஒதுக்கவில்லை. ரேஷன் கடைகள் செயல்படவில்லை என, பேசினார். இதற்கு பதிலளித்த அமைச்சர் நமச்சிவாயம், விஜய் புரிதல் இல்லாமல் பேசுகிறார் என, விமர்சனம் செய்தார்.
ரேஷன் கடையை பற்றி பேசுவதற்கு முன் அமைச்சர் நமச்சிவாயம் ரேஷன் கடை ஊழியர்களுக்கு ஊதியத்தை வழங்கிவிட்டு பேச வேண்டும்.
மற்ற மாநிலங்களில் ரேஷன் கடைகளில் அத்தியாவசிய பொருளான அரிசி, பருப்பு, எண்ணெய் , மண்ணெண்ணெய் வழங்கப்படுகிறது. இங்கு, அரிசி மட்டுமே வழங்கப்படுகிறது. 5 ஆண்டாகியும், ரேஷன் கடை ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கவில்லை.
ரேஷன் கடை திறக்காத தால் கடந்த 2024ம் ஆண்டு ஓட்டு கேட்க சென்ற அமைச்சர் நமச்சிவாயத்திற்கு, மக்கள் தக்க பதிலடி கொடுத்தனர். அமைச்சர் ஏதோ பேச வேண்டுமென குறை கூறு கிறார்.
புதுச்சேரி வளர்ச்சிக்காக பேசி வரும் த.வெ.க., தலைவர் விஜயை பற்றி அவதுாறாக அமைச்சர் நமச்சிவாயம் பேசினால் கடந்த 2024 ம் லோக்சபா தேர்தலை போல், 2026 சட்டசபை தேர்தலிலும் மக்கள் அவருக்கு தக்க பதிலடி கொடுப்பர்' என்றார்.