/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
முன்னாள் எம்.எல்.ஏ., பிறந்த நாள் விழா
/
முன்னாள் எம்.எல்.ஏ., பிறந்த நாள் விழா
ADDED : ஆக 19, 2025 08:00 AM

புதுச்சேரி : புதுச்சேரி அ.தி.மு.க., ஜெ.,பேரவை மாநில செயலாளர் முன்னாள் எம்.எல்.ஏ.,வுமான பாஸ்கர் தனது பிறந்தநாளை நேற்று கொண்டாடினார்.
பிறந்தநாளை முன்னிட்டு காலை சன்னியாசிதோப்பில் உள்ள தாயார் நினைவிடத்திற்கு சென்று மலர்துாவி அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து, முதலியார்பேட்டை நீரோடும் வீதியில் உள்ள விநாயகர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.
பின், தனது இல்லத்தில் அ.தி.மு.க., மாநில செயலாளரும், சகோதருமான அன்பழகன் முன்னிலையில் முன்னாள் எம்.எல்.ஏ., பாஸ்கர் கேக் வெட்டி கொண்டாடினார். அவருக்கு அன்பழகன் தங்க மோதிரம் அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.
இதில், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள், முன்னாள் வாரிய தலைவர்கள், அரசியல் கட்சி தலைவர்கள், அ.தி.மு.க., மாநில, தொகுதி, அணி நிர்வாகிகள் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.விழாவில், முதலியார்பேட்டை தொகுதியை சேர்ந்த 5 ஆயிரம் பேருக்கு, பிரியாணி விருந்து வழங்கப்பட்டது.
பிறந்தநாளை முன்னிட்டு, இன்று(19ம் தேதி) முதலியார்பேட்டை தொகுதியை சேர்ந்த ஏழைகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார்.முன்னதாக, தொகுதி முழுவதும் அவரது ஆதரவாளர்கள் மற்றும் நிர்வாகிகள் மூலம் கடந்த ஒரு வாரங்களாக பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

