/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அரசியல் பிரச்னையால் ஏனாமில் சுற்றுச்சூழல் நெருக்கடி மாஜி எம்.பி., குற்றச்சாட்டு

ADDED : ஏப் 05, 2025 04:16 AM
புதுச்சேரி: அரசியல் பிரச்னையால் ஏனாம் பிராந்தியத்தில் சுற்றுச்சூழல் நெருக்கடி ஏற்பட்டுள்ளது என, மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.
அவரது அறிக்கை:
ஏனாம் பிராந்தியத்தில் குப்பைகள் சரியாக வாரப்படாமல், அந்த பிராந்தியமே துர்நாற்றத்தில் மூழ்கி மக்கள் அவதியுறுகின்றனர். இப்பிரச்னையில் ஏனாம் எம்.எல்.ஏ.,வுக்கு மக்களிடம் கெட்ட பெயர் வாங்கிக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அரசியல் செய்யப்படுகிறது. இப்பிரச்னையில் அரசியல் கலந்திருப்பதால் பிராந்திய நிர்வாகியால் எதுவும் செய்ய முடியவில்லை.
அரசு நிர்வாகம், பிராந்திய நிர்வாகம், முனிசிபல் நிர்வாகம், எம்.எல்.ஏ., ஆகியோரிடையே ஒற்றுமை இல்லாததால் வனப்புக்குரிய ஏனாம் இன்று படுமோசமான சுற்றுப்புறச்சூழல் நெருக்கடியை சந்தித்து வருகிறது. பெஸ்ட் புதுச்சேரியை உருவாக்க இருப்பவர்கள் ஏனாம் மக்களின் நல்வாழ்வைப் பேணும் வகையில் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில், கூறப்பட்டுள்ளது.