/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மலரும் நினைவுகளில் மூழ்கிய முன்னாள் போலீஸ் அதிகாரிகள்
/
மலரும் நினைவுகளில் மூழ்கிய முன்னாள் போலீஸ் அதிகாரிகள்
மலரும் நினைவுகளில் மூழ்கிய முன்னாள் போலீஸ் அதிகாரிகள்
மலரும் நினைவுகளில் மூழ்கிய முன்னாள் போலீஸ் அதிகாரிகள்
ADDED : ஜூலை 19, 2025 01:18 AM

புதுச்சேரி : ஓய்வு பெற்ற காவல் துறை அதிகாரிகள் சந்தித்து மலரும் நினைவுகளில் மூழ்கினர்.
புதுச்சேரி காவல் துறையில் 1973ல் ஆயுதப்படை கம்பெனி துவங்கியபோது மூன்று அதிகாரிகள் உள்பட 152 பேர் தேர்வு செய்யப்பட்டனர். அப்போது நிக்கல் குமார் ஐ.ஜி.,யாக இருந்தார். இவர்கள் பயிற்சி முடித்து 1974ல் மூன்று கம்பெனிகளிலும் பணி அமர்த்தப்பட்டனர். அடுத்தாண்டு புதிய நடைமுறை காவல் துறையில் அமல்படுத்தப்பட்டது. அதன்படி ஆயுதப்படை சட்ட ஒழுங்கு போலீசாருடன் இணைக்கப்பட்டனர். அனைவரும் பல்வேறு போலீஸ் ஸ்டேஷன்களில் இடமாற்றம் செய்யப்பட்டனர்.
பல்வேறு பதவி உயர்வுகளை பெற்ற இவர்கள் கடந்த 2011ல் இருந்து படிப்படியாக ஓய்வு பெற்றனர். இவர்கள் அனைவரும் அண்மையில் ஓய்வு பெற்ற எஸ்.பி., விஜயகுமார் தலைமையில் தனியார் ஓட்டலில் ஒன்று கூடி மலரும் நினைவுகளில் மூழ்கினர். காவல் துறை அதிகாரிகள் தங்களுடைய பணிகளை நினைவு கூர்ந்தனர்.
ஓய்வு பெற்ற எஸ்.பி., விஜயகுமார் கூறுகையில், 'குடும்பத்தினை மறந்து காவல் துறையில் பணியாற்றினோம். ஓய்வுக்கு பின் மனைவி, மகன், மகள், பேரன், பேத்திகள் என குடும்பத்துடன் முழு நேரத்தினை செலவிடுகிறோம்.
இருப்பினும் பணியின்போது தோழமையுடன் பழகிய நண்பர்களை நாம் மறக்க முடியுமா. அதனால் தான் அடிக்கடி சந்தித்து கூடி மகிழ்கிறோம். பணியில் பயிற்சியில் பக்கபலமாக இருந்த நண்பர்களை சந்திக்கும்போது, மனதுக்கு கிடைக்கும் உற்சாகமே தனி. பரஸ்பர புரிதலும் மரியாதையும் தான் இன்றைக்கும் எங்களை நண்பர்களாக ஒரே நேர்கோட்டில் இணைக்கிறது. ஆனால் ஒவ்வொரு ஆண்டும் மீண்டும் நாங்கள் சந்திக்கும்போது, 1973 பேட்ஜ் காவல் பக்கத்தில் இருந்து சில நண்பர்களை இழந்திருப்பது வேதனையளிக்கிறது' என்றார்.