தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/எம்.எல்.ஏ., அலுவலகத்தில் இலவச கண் சிகிச்சை முகாம்

எம்.எல்.ஏ., அலுவலகத்தில் இலவச கண் சிகிச்சை முகாம்

எம்.எல்.ஏ., அலுவலகத்தில் இலவச கண் சிகிச்சை முகாம்


UPDATED : நவ 24, 2026 03:30 PM

ADDED : நவ 24, 2026 03:30 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 24, 2026 03:30 PM ADDED : நவ 24, 2026 03:30 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வில்லியனுார்: வில்லியனுார் தொகுதி எம்.எல்.ஏ அலுவலகத்தில் இலவச கண் பரிசோதனை முகாம் நடந்தது.

காமாட்சி அம்மாள் அறக்கட்டளை மற்றும் வாசன் கண் மருத்துவமனை ஆகியவை இணைந்து வில்லியனுார் தொகுதி மக்கள் பயன்பெறும் வகையில் இரண்டு நாள் கண் பரிசோதனை முகாம் எம்.எல்.ஏ., அலுவலக வளாகத்தில் நடந்தது. முகாமை ரவிக்குமார் எம்.எல்.ஏ., துவக்கிவைத்து கண் பரிசோதனை செய்துகொண்டனர்.

முகாமில் கணினி மூலம் கண் பரிசோதனை, துார மற்றும் கிட்டப்பார்வை குறைபாடுகள் கண்டறிதல், கண் கண்ணாடிக்கான பரிசோதனை, கண்புரை நோய் கண்டறிதல், மாறுகண் குறைபாடு, கண்ணில் சதை வளர்ச்சி மற்றும் சர்க்கரை நோயால் கண்களில் ஏற்படும் பாதிப்புகளைக் கண்டறிதல் உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகள் செய்தனர்.

முகாமில் குறைபாடு உள்ளவர்களுக்கு கண் கண்ணாடிகள் குறைந்த விலையில் வழங்கினர். முகாமில் பங்கேற்று தொடர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு வருபவர்களுக்கு இலவச சிகிச்சை அளிக்கப்படுகின்றனர்.

முகாமில் வில்லியனுார் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு கண் பரிசோதனை செய்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us