UPDATED : நவ 24, 2026 03:30 PM
ADDED : நவ 24, 2026 03:30 PM

அ நிறம் | அளவு
வில்லியனுார்: தொண்டமாநத்தம் தீப ஒளி பள்ளி மாணவர்களுக்கு கார்த்திகேயன் எம்.எல்.ஏ., இலவச சைக்கிள் வழங்கினார்.
புதுச்சேரி சமூக நலத்துறை சார்பில் ஊசுடு தொகுதி தொண்டமாநத்தம் கிராமத்தில் உள்ள தீப ஒளி அரசு உதவி பெறும் உயர்நிலைப் பள்ளியை சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவர்கள் 97 பேருக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா பள்ளி வளாகத்தில் நடந்தது.
நிகழ்ச்சியில் கார்த்திகேயன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கி, பள்ளி மாணவர்களுக்கு சைக்கிள் வழங்கினார். விழாவில் பள்ளியின் தலைமை ஆசிரியை அனிட்டா மாலினி, பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள், ஊர் முக்கியஸ்தர்கள் திரளாக கலந்துகொண்டனர்.
