ஆதிதிராவிட மக்களுக்கு இலவச சோலார் மோகன்தாஸ் எம்.எல்.ஏ., கோரிக்கை
ஆதிதிராவிட மக்களுக்கு இலவச சோலார் மோகன்தாஸ் எம்.எல்.ஏ., கோரிக்கை
ADDED : ஆக 28, 2026 10:44 PM
புதுச்சேரி: பட்ஜெட் மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் மோகன்தாஸ் எம்.எல்.ஏ., பேசியதாவது;
கரிக்கலாம்பாக்கம் மற்றும் கோர்க்காடு பகுதிகளை இணைக்கும் வகையில் வடிகால் கால்வாய் அமைக்க வேண்டும்.
கிருமாம்பாக்கம், கோர்க்காடு ஏரிகளை முழுமையாக புனரமைத்து சுற்றுலாத் தலங்களாக மாற்ற வேண்டும். கரிக்கலாம்பாக்கம் பகுதியில் 5 லட்சம் லிட்டர் கொள்ளளவு மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைக்க வேண்டும். பனித்திட்டு பகுதியில் நவீன வசதிகளுடன் கூடிய மீன்பிடி துறைமுகம் அமைத்து தர வேண்டும்.
சேலியமேடில் பல்நோக்கு விளையாட்டு மைதானம், கோர்க்காட்டில் செயற்கை நுண்ணறிவு, தரவு அறிவியல், ரோபாட்டிக்ஸ் உள்ளிட்ட துறைகளுக்கான சிறப்பு கல்லுாரி அமைக்கப்பட வேண்டும்.
ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின குடும்பங்களுக்கு இலவச சோலார் மின் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். நரம்பை, பனித்திட்டு கிராமப்புறங்களுக்கு கூடுதல் பஸ் வசதிகள் மற்றும் பழுது அடைந்துள்ள சாலைகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஏம்பலம் – கோர்க்காடு செல்லும் நீர்வரத்து வாய்க்கால்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி துார்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.
