/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கெங்கையம்மன் கோவில் திருப்பணிக்கு நிதி வழங்கல்
/
கெங்கையம்மன் கோவில் திருப்பணிக்கு நிதி வழங்கல்
ADDED : ஆக 02, 2025 06:55 AM

புதுச்சேரி : காலாப்பட்டு தொகுதியில் பிள்ளைச்சாவடி மீனவ கிராம கோவில் திருப்பணிக்கு ரூ.1.75 லட்சம் காசோலையை கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ., வழங்கினார்.
காலாப்பட்டு தொகுதிக்கு உட்பட்ட பிள்ளைச்சாவடி மீனவ கிராமத்தில் கெங்கையம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் ரூ.8.5 லட்சம் மூலம் திருப்பணி செய்யப்பட்டு கடந்த ஜூலை 7ம் தேதி, கும்பாபிேஷகம் நடந்தது.
இந்த கோவிலில் இறுதிகட்ட திருப்பணிகளை முடிக்க ரூ.1.75 லட்சம் தேவைப்படுவதால், பிள்ளைச்சாவடி மீனவ கிராம மக்கள், தொகுதி எம்.எல்.ஏ.,விடம் கோரிக்கை வைத்தனர்.
இதன் பேரில், இந்து சமய அறநிலைய துறை மூலம் கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ., பஞ்சாயத்தார் முன்னிலையில் ரூ.1.75 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார்.
பா.ஜ., நிர்வாகிகள் திருமூர்த்தி, செந்தில், பஞ்சாயத்து தலைவர் ஆறுமுகம், கன்னியப்பன், ராகவன் உட் பட பலர் உடனிருந்தனர்.

