/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
முழியன் குளம் சீரமைக்க ரூ.3 லட்சம் நிதி வழங்கல்
/
முழியன் குளம் சீரமைக்க ரூ.3 லட்சம் நிதி வழங்கல்
ADDED : நவ 22, 2025 05:58 AM

அரியாங்குப்பம்: பூரணாங்குப்பம் முழியன் குளம் சீரமைப்பு பணிக்கு சி.எஸ்.ஆர்., நிதியில் இருந்து தனியார் நிறுவனம் சார்பில், 3 லட்சம் ரூபாய் நிதி வழங்கப்பட்டது.
தவளக்குப்பம் அருகில் உள்ள பூரணாங்குப்பத்தில் பழமை வாய்ந்த முழியன் குளம் உள்ளது. இக்குளம் சீரமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. காலாப்பட்டு கெம்பாப் ஆல்கஹால் தனியார் நிறுவனம் சார்பில், சி.எஸ்.ஆர்., நிதியில் இருந்து 3 லட்சம் ரூபாய் வழங்கியுள்ளது.
இதற்கான காசோலையை, ரகுராமன், உழவர்கரை நகராட்சி ஆணையர் சுரேஷராஜ் ஆகியோர் முன்னிலையில், முழியன் குளம் சீரமைப்பு குழு நிர்வாகி ஆனந்தனிடம் நேற்று வழங்கினர். அப்போது, சுந்தராசு, புருேஷாத்தமன், குமாரசாமி, கந்தன், லட்சுமிகாந்தன், சக்திபாலன் உடனிருந்தனர்.

