ADDED : அக் 25, 2026 08:24 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: வில்லியனுார் அடுத்த மங்கலம் பகுதியை சேர்ந்தவர் குணசேகரன்,51; விவசாயி. இவர் கடந்த 19ம் தேதி, மங்கலம் தேசிய நெடுஞ்சாலை அருகில் உள்ள தனது நிலத்திற்கு சென்று விட்டு, சாலையில் நின்று கொண்டிருந்தார்.
அப்போது, இரண்டு பைக்குகளில் 4 பேர் கொண்டு கும்பல், குணசேகரனை சரமாரியாக தாக்கி விட்டு சென்றனர். காயமடைந்த அவர், கரிக்கலாம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். அவர் அளித்த புகாரின் பேரில், மங்கலம் போலீசார் வழக்குப் பதிந்து, மர்ம கும்பலை தேடி வருகின்றனர்.
