ADDED : செப் 10, 2025 08:21 AM
புதுச்சேரி : பெரியக்கடை சப் இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையிலான போலீசார் நேற்று லல்லி தொலாந்தல் வீதி, செஞ்சி சாலை சந்திப்பு அருகே வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அவ்வழியாக அதிவேகமாக பைக்கில் வந்த வாலிபர், போலீசாரை கண்டவுடன் அங்கிருந்து தப்பி ஓட முயன்றார். அவரை விரட்டி பிடித்து போலீசார், பைக்கை சோதனை செய்தனர்.
அதில், பெட்ரோல் டேங்க் கவரில் 20 கிராம் கஞ்சா பொட்டலங்கள் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, அவரை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தியதில், கருவடிக்குப்பம், நரிகுறவர் காலனியை சேர்ந்த சங்கர் மகன் மருதுபாண்டி, 23; என்பது தெரியவந்தது.
இதையடுத்து, மருதுபாண்டியை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்த 20 கிராம் கஞ்சா பொட்டலங்கள், பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். கோர்ட்டில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.