UPDATED : நவ 06, 2026 11:59 PM
ADDED : நவ 06, 2026 11:57 PM

அ நிறம் | அளவு
புதுச்சேரி: புதுச்சேரி பா.ஜ., மாநில தலைவர் ராமலிங்கம் தலைமையில் மாநில, மாவட்ட, தொகுதி மற்றும் அணி, பிரிவு பொறுப்பாளர்களுக்கு பரிசு பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி பா.ஜ., தலைமை அலுவலகத்தில் நடந்தது.
நிகழ்ச்சியில், மாநிலத் தலைவர் ராமலிங்கம் அனைத்து நிர்வாகிகளுக்கும், தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்து, பரிசுப் பொருட்களை வழங்கினார்.
நிகழ்ச்சியில் முன்னாள் சபாநாயகர் செல்வம், மாநில பொது செயலாளர்கள் மோகன்குமார், லட்சுமிநாராயணன், மூத்த தலைவர்கள் தாமோதரன், இளங்கோவன், அன்புச்செல்வம் உட்பட பலர் பங்கேற்றனர்.
