சீனியாரிட்டி அடிப்படையில் பதவி உயர்வு தேசிய ஆசிரியர் சங்கம் கோரிக்கை
சீனியாரிட்டி அடிப்படையில் பதவி உயர்வு தேசிய ஆசிரியர் சங்கம் கோரிக்கை
UPDATED : நவ 06, 2026 11:59 PM
ADDED : நவ 06, 2026 11:57 PM

புதுச்சேரி: புதுச்சேரி தேசிய ஆசிரியர் சங்கம் தலைவர் பாட்ஷா ஆசிரியர்களின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புதுச்சேரி பள்ளி கல்வித்துறை இயக்குனருக்கு மனு அளித்தார்.
மனுவில், புதுச்சேரி பி.எஸ்.டி., டி.ஜி.டி., ஆசிரியர்களுக்கு கவுன்சிலிங் நடத்த வேண்டும். எம்.ஏ.சி.பி., வேலைகள் தாமதமின்றி துரிதப்படுத்த வேண்டும். சிறப்பு டி.என்.டி.இ.டி., தேர்வுக்கு இரண்டாவதாக அனுமதி பெற்றுத் தந்தமைக்கு நன்றி. சிறப்பு ஏ.பி.டி.இ.டி., முன்கூட்டியே அனுமதி பெற்று தர வேண்டும்.
கேரளா, கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா உள்ளிட்ட பெரும்பான்மையான மாநிலங்களில் ஆசிரியர்கள் டெட் தேர்வு எழுத அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
அதுபோல் புதுச்சேரி, தமிழ்நாடு சிறப்பு டெட் தேர்வை பெரும்பான்மையான ஆசிரியர்கள் முடிக்காமல் இருக்கிறார்கள். அடுத்த ஸ்பெஷல் டெட் தேர்வுக்கு அனுமதி பெற்று தர வேண்டும். சீனியாரிட்டி அடிப்படையில் தொடர்ந்து பதவி உயர்வு அளிக்க வேண்டும் என, தெரிவிக்கப்பட்டிருந்தது.
பொது செயலாளர் தீபக் போச்சம்பள்ளி, பொருளாளர் ராஜ்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.
