ADDED : செப் 26, 2026 11:04 PM
அ நிறம் | அளவு
நெட்டப்பாக்கம்: கல்மண்டபத்தில் கிணற்றில் விழுந்த ஆட்டினை தீயணைப்பு துறையினர் பத்திரமாக மீட்டனர்.
நெட்டப்பாக்கம் அடுத்த கல்மண்டபம் அந்தராசிக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் தமிழ்செல்வி, 35. இவர், நேற்று தனக்கு சொந்தமான 10க்கும் மேற்பட்ட ஆடுகளை மேய்ப்பதற்கு அங்குள்ள வயல்வெளி பகுதிக்கு ஓட்டிச் சென்றார். மதியம் 3:00 மணியளவில், அங்குள்ள 65 அடி ஆழம் கொண்ட கிணற்றில் ஒரு பெண் ஆடு தவறி விழுந்தது.
தகவலறிந்த மடுகரை தீயணைப்பு துறை நிலைய அதிகாரி ரஞ்சித்லால், பொறுப்பாளர் சக்திவேல் தலைமையில் வீரர்கள் கிணற்றில் இறங்கி ஆட்டினை பத்திரமாக மீட்டு உரியவரிடம் ஒப்படைத்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
