/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அரசு ஊழியர் சம்மேளனம் பணி நிரந்தரம் கோரி இன்று ஆர்ப்பாட்டம்
/
அரசு ஊழியர் சம்மேளனம் பணி நிரந்தரம் கோரி இன்று ஆர்ப்பாட்டம்
அரசு ஊழியர் சம்மேளனம் பணி நிரந்தரம் கோரி இன்று ஆர்ப்பாட்டம்
அரசு ஊழியர் சம்மேளனம் பணி நிரந்தரம் கோரி இன்று ஆர்ப்பாட்டம்
ADDED : ஏப் 28, 2025 04:24 AM
புதுச்சேரி: பணி நிரந்தர கோரிக்கையை வலியுறுத்தி புதுச்சேரி அரசு ஊழியர் சங்கங்களின் சம்மேளனம் இன்று ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்துள்ளது.
சம்மேளன செயல் தலைவர் ராதாகிருஷ்ணன், பொதுச் செயலாளர் முனுசாமி ஆகியோர் கூறியதாவது;
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள 34 அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளில் நிரந்த பணியிடங்கள் 770க்கும் மேல் உள்ளது. அந்த பணியிடங்களில் அரசு உதவி பெறும் தனியார் பள்ளி நிர்வாகங்கள் ஆசிரியர்களை நியமித்து, கல்வித்துறை அனுமதி கோரியுள்ளது. கல்வித்துறை கடந்த 15 ஆண்டுகளாக எந்த பதவியையும் நிரந்தரம் செய்யாமல் இழுத்தடித்து வருகிறது.
கடந்த 2014ம் ஆண்டு பணி நிரந்தர கோரிக்கையை வலியுறுத்தி ஆசிரியர்கள், ஊழியர்கள் நீதிமன்றத்தை அணுகி பணி நிரந்தரம் செய்யும் தீர்ப்பு பெற்ற பின்னும், அதனை கல்வித்துறை நிறைவேற்றாமல் அலைக்கழித்து வருகிறது.
இதையடுத்து, அரசு உதவி பெறும் தனியார் பள்ளி ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் பணி நிரந்தர கோரிக்கையை வலியுறுத்தி, அரசு ஊழியர் சம்மேளனம் இன்று 28ம் தேதி மாலை கல்வித்துறை வளாகம் முன் ஆதரவு ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்துள்ளது. கல்வி அமைச்சர், முதல்வர் இப்பிரச்னையில் நல்ல முடிவு எடுக்க வேண்டும்' என்றனர். சம்மேளன கவுரவ தலைவர் பிரேமதாசன், தலைவர் ரவிச்சந்திரன், தனியார் பள்ளி ஊழியர் சம்மேளன தலைவர் வின்சென்ட், பொதுச் செயலாளர் கிறிஸ்டோபர் உடனிருந்தனர்.