தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/அரசு செவிலியர் அதிகாரிகள் சங்கம் அஞ்சல் அட்டை அனுப்பும் போராட்டம்

அரசு செவிலியர் அதிகாரிகள் சங்கம் அஞ்சல் அட்டை அனுப்பும் போராட்டம்

அரசு செவிலியர் அதிகாரிகள் சங்கம் அஞ்சல் அட்டை அனுப்பும் போராட்டம்


UPDATED : நவ 16, 2026 06:16 PM

ADDED : நவ 16, 2026 06:16 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 16, 2026 06:16 PM ADDED : நவ 16, 2026 06:16 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரி அரசு செவிலியர் அதிகாரிகள் சங்கத்தின் சார்பில், கோரிக்கைகளை வலியுருத்தி, கவர்னர் மற்றும் தலைமைச் செலயருக்கு, அஞ்சல் அட்டை அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுச்சேரி அரசு செவிலியர் அதிகாரிகள் சங்கத்தின் சார்பில், அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள செவிலியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும். தகுதி உள்ள செவிலியர்களுக்கு பதவி உயர்வு வழங்கிட வேண்டும். தற்போதைய தேவைகளுக்கு ஏற்ப நியமண விதிகளில் திருத்தம் செய்திட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து வலியுருத்தி போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக, அஞ்சல் அட்டை அனுப்பும் போராட்டம் நேற்று நடந்தது. புதுச்சேரி தலைமை தபால் நிலையம் எதிரே நடந்த போராட்டத்திற்கு, சங்க தலைவர் சுனிலா குமாரி தலைமை தாங்கினார். செயலாளர் ஹரிதாஸ், நிர்வாகிகள் செல்வி, சங்கீதா, சந்தானலட்சுமி, அருண், பூரணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். போராட்டத்தில், அரசு பொது மருத்துவமனைகள் மற்றும் பல்வேறு சுகாதார நிறுவனங்களில் பணியாற்றும் ஏராளமான செவிலிய அதிகாரிகள் பங்கேற்று தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி, கவர்னர், தலைமைச் செயலர் ஆகியோருக்கு அஞ்சல் அட்டைகளை அனுப்பும் போாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், இப்போராட்டத்தில், அரசு ஊழியர் சம்மேளன நிர்வாகிகள் மற்றும் சுகாதார ஊழியர் சங்கத்தின் நிர்வாகிகளும் பங்கேற்று ஆதரவு தெரிவித்தனர். அடுத்த கட்டமாக வரும் 18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் செவிலிய அதிகாரிகள் கருப்பு பேட்ஜ் அணிந்து பணிபுரிய முடிவு செய்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us