UPDATED : நவ 16, 2026 06:08 PM
ADDED : நவ 16, 2026 06:08 PM

அ நிறம் | அளவு
வில்லியனுார்: ஊசுடு தொகுதி சேதராப்பட்டு மெயின்ரோட்டில் தடுப்பு கட்டையுடன் கூடிய நடைபாதை அமைப்பதற்கு கார்த்திகேயன் எம்.எல்.ஏ., பூமி பூஜை செய்து பணியை துவக்கிவைத்தார்.
புதுச்சேரி பொதுப்பணித்துறை கட்டிடங்கள் மற்றும் சாலைகள் வடக்கு கோட்டம் சார்பில் ரூ.27:67 லட்சம் செலவில் ஊசுடு தொகுதி சேதராப்பட்டு பெட்ரோல் பங்க் துவங்கி மெயின்ரோட்டில் தடுப்பு கட்டையுடன் நடைபாதை அமைப்பதற்கு கார்த்திகேயன் எம்.எல்.ஏ., பூமி பூஜை செய்து பணிகளை துவக்கிவைத்தார்.
இந்நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை கட்டிடங்கள் மற்றும் சாலைகள் வடக்கு கோட்டம் செயற்பொறியாளர் வைத்தியநாதன், உதவிப் பொறியாளர் ஜலில், இளநிலைப் பொறியாளர் அருண்ஆனந்த் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் திரளாக கலந்துகொண்டனர்.
