/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
உள்ளாட்சி ஊழியர்களுக்கு நிலுவை தொகை அரசாணை
/
உள்ளாட்சி ஊழியர்களுக்கு நிலுவை தொகை அரசாணை
ADDED : நவ 01, 2025 02:08 AM

புதுச்சேரி: நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்களுக்கு, 7வது ஊதியக்குழுவில், 33 மாதங்களுக்கான நிலுவை தொகைக்கான அரசாணையை, முதல்வர் ரங்கசாமி வெளியிட்டார்.
புதுச்சேரி மாநிலத்தில் 5 நகராட்சி மற்றும் 10 கொம்யூன் பஞ்சாயத்துக்களின் ஊழியர்கள், 7வது ஊதியக்குழுவின் 33 மாத நிலுவை தொகை கோரிக்கை கேட்டு வந்தனர்.
அதன்படி, கடந்த 01.01.2016 முதல் 01.10.2018 வரையிலான 33 மாத நிலுவை தொகை, ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் பயன்பெறும் வகையில் அதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
சட்டசபையில் நேற்று நடந்த நிகழ்வில், முதல்வர் ரங்கசாமி அரசானையை வெளியிட்டார். சபாநாயகர் செல்வம், உள்ளாட்சித்துறை செயலர் கேசவன், இயக்குநர் சக்திவேல், துணை இயக்குநர்கள் சவுந்திரராஜன், பாலசவுந்தரி, துறை கண்காணிப்பாளர்கள், நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்கள் உடனிருந்தனர்.

