UPDATED : அக் 20, 2026 08:10 PM
ADDED : அக் 20, 2026 08:06 PM

அ நிறம் | அளவு
புதுச்சேரி: முத்தரையர்பாளையம், இளங்கோ அடிகள் அரசு மேல்நிலைப்பள்ளியில், 2005ம் ஆண்டு 10ம் வகுப்பு, 2007ம் ஆண்டு பிளஸ் 2 பயின்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.
முன்னாள் மாணவர்கள் தங்களது பள்ளிப் பருவ நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். பின் கல்வி கற்றுக்கொடுத்த ஆசிரியர்களுக்குப் பாராட்டு தெரிவித்தனர்.
பல ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்த முன்னாள் மாணவர்கள், தங்களது பள்ளி வாழ்க்கையின் இனிய நினைவுகளை பகிர்ந்து கொண்டு மகிழ்ந்தனர். விழாவில் பள்ளி துணை முதல்வர், ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து பள்ளியில் படிக்கும் அனைத்து மாணவர்களுக்கு பேனா, பென்சில் வழங்கப்பட்டு, பள்ளிக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
