/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
முதல்வர் மனக்குமுறல் எதிரொலி விரைவில் அரசு செயலர்கள் மாற்றம்
/
முதல்வர் மனக்குமுறல் எதிரொலி விரைவில் அரசு செயலர்கள் மாற்றம்
முதல்வர் மனக்குமுறல் எதிரொலி விரைவில் அரசு செயலர்கள் மாற்றம்
முதல்வர் மனக்குமுறல் எதிரொலி விரைவில் அரசு செயலர்கள் மாற்றம்
ADDED : ஜூன் 08, 2025 04:03 AM
முதல்வர் ரங்கசாமி சமீபகாலமாக, அதிகாரிகள் மீதான தனது அதிருப்தியை பொது நிகழ்ச்சிகளிலேயே வெளிப்படுத்தி வருகிறார். குறிப்பாக, மாநில வளர்ச்சிக்கான திட்டங்களை அரசு செயல்படுத்த அதிகாரிகள் ஒத்துழைப்பு அளிப்பதில்லை. அவர்கள் இஷ்டத்திற்கு செயல்படுகின்றனர். அவர்களை இடமாற்றம் கூட செய்ய முடியவில்லை என, ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகிறார்.
இதன் உச்சகட்டமாக சில வாரங்களுக்கு முன் சட்டசபையில் தன்னை நேரில் வந்து சந்தித்த மத்திய அமைச்சரிடம் தனது மனக்குமறலை வெளிப்படுத்தினார். மேலும், அதிகார மையத்தில் உள்ள அதிகாரிகளை மாற்றவும் வலியுறுத்தினார்.
இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சகம், புதுச்சேரியில் பணியாற்றிய ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் நெடுஞ்செழியன் டில்லிக்கும், சோமசேகர் அப்பாராவ் லட்சத்தீவிற்கும், ஐ.பி.எஸ்., அதிகாரி நாராசைதன்யா டில்லிக்கு மாற்றம் செய்தது.
இவர்களுக்கு பதிலாக டில்லி, ஜம்மு காஷ்மீர், லட்சத்தீவு, அந்தமான் நிக்கோபர் தீவுகளில் பணியாற்றிய ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் கிருஷ்ணன மோகன் உப்பு, ரவி பிரகாசம், ஸ்மிதா, சவுத்ரி முகமது யாசின், விக்ராந்த்ராஜா, ஐ.பி.எஸ்., அதிகாரிகள் ஏ.கே.லால், நித்யாராமகிருஷ்ணன் ஆகியோர் புதுச்சேரிக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
புதுச்சேரிக்கு மாறுதலாகி வரும் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளுக்கு பணி ஒதுக்கீடு செய்ய வேண்டியுள்ளது. இதனை வாய்ப்பாக பயன்படுத்தி, அரசுக்கு முட்டுக்கட்டை போட்டு வரும் அதிகாரிகளை மாற்றம் செய்திட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதனால், ஓரிரு வாரத்திற்குள் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் பலர் அதிரடியாக மாற்றப்படுவது உறுதியாகி உள்ளது.